பெரும்பாலான கனேடியர்கள் தடுப்பூசி கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க விருப்பம் !
28.05.2021 12:04:17
கனடாவில் தடுப்பூசி கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
79 சதவீத கனேடியர்கள் பன்னாட்டு அளவில் பயணிக்க தடுப்பூசி கடவுச்சீட்டை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளதனை அங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் 76 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு எல்லையைத் தாண்டி அதை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர்.
வீட்டில், 55 சதவீத மக்கள் உணவகங்கள், வணிகவாளகங்கள், திரைப்பட அரங்குகள் மற்றும் பணியிடங்கள் போன்ற பொது இடங்களில் சான்றுகளை வழங்குவதாகக் கூறினர்.
ரென்ஃப்ரூ கவுண்டியில், 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். ஆனால், சிலர் தங்கள் தொலைபேசியில் டிஜிட்டல் கடவுச்சீட்டு ஸ்கேன் செய்யப்படுவதை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.