கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்த விபரம் -அமெரிக்கா
28.04.2021 11:10:25
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 52 ஆயிரத்து 46 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 கோடியே 29 இலட்சத்து 27 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 885 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 இலட்சத்து 87 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது.