எதிர்பார்ப்பு மிக்க, 15பேர் கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணி !
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க, 15பேர் கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இந்திய ரி-20 போட்டிகளில் விளையாடிவரும் அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளை, துரதிஷ்டவசமாக அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான அணியில், கே.எல்.ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷ்தீப் சிங், அவிஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், 2019ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்தது. ஆனால், நாட்டில் உள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடர், எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.