வர்ஷங்களுக்கு சேஷம்' கவனத்தைக் கவரும் நிவின் பாலி

14.04.2024 07:15:00

நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான 'வர்ஷங்களுக்கு சேஷம்' ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. 

 

இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிவின் பாலியின் தனித்துவமான நடிப்பு.. கவனத்தை கவர்கிறது. 'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் அவரது திரை தோற்றம்... அவர் ஆற்றல்மிக்க  நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் மட்டுமல்லாமல் இத்திரைப்படம்.. சினிமா ரசிகர்களின் ரசனையை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. இந்தத் திரைப்படம், 70 கள் மற்றும் 80களில் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வியலை பற்றியதாகும். சினிமா ரசிகர்களின் மையமாக திகழும் கோடம்பாக்கம்.. பல திரைப்பட தயாரிப்பாளர்களின் வெற்றியையும், புகழையும், தோல்விகளையும் கண்டது. இந்த நகரம்தான் படத்தின் கதைக்கள பின்னணி. 

 

படத்தின் இரண்டாம் பாதியில் நிவின்பாலி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர்ப்புள்ள நடிப்பை வழங்குவதை காண்கிறோம். 'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் நிவின் பாலியின் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டாராகவும், சிறந்த நடிகராகவும் அவர், தனது கதாபாத்திரத்தின் சாரத்தை சிரமமின்றி உட்கிரகித்து ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு வெளிப்பாட்டையும் உணர்வுபூர்வமாகவும்,உய்த்துணர்வாகவும் வழங்கி, பார்வையாளர்களை மயக்கி அவர்களை.. அவரது பயணத்துடன் இணைத்துக்கொள்கிறார்.

 

'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் நிவின் பாலியை வேறுபடுத்தி காட்டுவது நுணுக்கம் மற்றும் நுட்பத்துடன் கூடிய எண்ணற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்... முப்பது நிமிடங்களுக்கும் குறைவான திரை தோன்றலில் நிவின்பாலி பார்வையாளர்களை எளிதாக கவர்கிறார். பச்சாதாபம் மற்றும் புரிதல் உணர்வுடன் பார்வையாளர்களை தனது கதாபாத்திரத்திற்குள் உள்ளிழுத்து விடுகிறார். 

 

அவர் அந்த கதாபாத்திரத்தின் சிக்கலான தன்மைகளையும், சூழல்களையும் அனாயசமான நடிப்பால் எளிதில் கடந்து செல்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பாதிப்பு மற்றும் அதன் வலிமையை சம அளவில் வெளிப்படுத்துகிறார். இது பல ஆண்டுகளாக கொண்டாடப்படுவதற்கும், போற்றப்படுவதற்கும், நினைவு கூறப்படுவதற்கும் தகுதியான ஒரு நடிப்பாகத் திகழ்கிறது. 

 

நிவின் பாலியின் அட்டகாசமான நடிப்புக்கு கூடுதலாக 'வர்ஷங்களுக்கு சேஷம்' வலிமையான மற்றும் அழுத்தமான கதைகளத்தையும், திறமையான சக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் ஒரு ஹைடெக்கான சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம்.. ரசிகர்களிடத்தில் நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.