கமலுக்காக விட்டு கொடுக்கும் ரஜினி!.

11.10.2026 10:56:45

நடிகர் ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு மருத்துவராக நடித்து வருகிறார். ஆக்சன் கலந்த ஒரு திரில்லர் குடும்ப திரைப்படமாக தர்மன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்ற வருவதால் வருகிற பொங்கலுக்கு தர்மன் படம் வெளியாகும் என பலராலும் சொல்லப்பட்டது.
 

ரஜினியும் அந்த முடிவில்தான் இருந்தார். ஆனால் லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 3 திரைப்படம் மீண்டும் தூசி தட்டப்படவிருக்கிறது. சமீபத்தில் புதிய போஸ்டரையும் லைக்கா நிறுவனம் வெளியிட்டது. அந்த படத்திற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. எனவே அந்த படம் முடிந்தால் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பிருக்கிறது.

எனவே, நண்பர் கமலின் படம் வெளியாவதால் ரஜினியின் தர்மன் திரைப்படம் ஏப்ரல் மாதம் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. பொதுவாக தனது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதை ரஜினி விரும்ப மாட்டார். ஆனால் கமலுக்காக ரஜினி விட்டுக் கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது.