இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக்கூடும்

28.07.2021 10:38:44

பிரித்தானியா, தமது அண்மைய பயண ஆலோசனையில், இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களின் அபாயத்தை குறைத்துக் காட்டியுள்ளது. இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவு மற்றும் குறைந்து வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக்கூடும் என்று கடந்த 20ஆம் திகதியின் பயண ஆலோசனை குறிப்பில் பிரித்தானியா குறிப்பிட்டிருந்தது.

விருந்தகங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளிநாட்டினர் செல்லக்கூடிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

பயணிகள் நெரிசலான பொது இடங்கள், பெரிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

ஈராக் மற்றும் சிரியாவில் மோதல்களால் குழுக்கள் அல்லது ஆட்கள், பிரித்தானிய நலன்கள் மற்றும் பிரிதானிய பிரஜைகளுக்கு எதிராக உலகளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், எனவே இந்த நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.