பஸ்சில் குண்டு வெடித்து ஒருவர் பலி; 42 பேர் காயம்

13.02.2022 12:30:14

சீனாவில் பஸ்சில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த, 42 பேரில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.அண்டை நாடான சீனாவின் வடகிழக்கில் உள்ள சென்யாங் நகரில், நேற்று ஒரு பஸ்சில் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.