
பொருளாதாரத்தில் இலங்கை முன்னேற்றம்!
11.09.2025 10:00:25
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
அதன்படி, நாட்டின் முதன்மை இருப்பு 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறைந்த அடிப்படையில் நிலவியது. எனினும் தற்போது நாட்டின் முதன்மை இருப்பு 7.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த கால கொள்கை மாற்றத்தில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி அமைத்தல் மற்றும் வரிகளை அதிகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளினால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. |