சென்னையில் சீரற்ற வானிலையால் 14 பேர் பலி

13.11.2021 06:46:44

சென்னையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழையால், சென்னையில் சுமார் 444 இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளும், சுரங்கப் பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளமையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்றைய தினம் விமான சேவைகள் 5 மணிநேரம் நிறுத்தப்பட்டன.

51 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டதுடன், 14 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.