கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள சுதந்திரக் கட்சியினரின் விசேட கூட்டம்!
05.03.2022 05:21:55
மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களின் விசேட கூட்டமொன்று இன்று (05) காலை 10 மணிக்கு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன், சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.