வரலாற்றை புரட்டி போட் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல்

05.07.2024 08:06:05

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் கைப்பற்றியுள்ளது.

பிரித்தானிய  தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கின்றமை இதுவே முதல் தடவையாகும்.

தேர்தல் வெற்றியின் பின்னர் மக்களுக்கு மத்தியில் உரையாடிய கீர் ஸ்டார்மர், “நாம் சாதித்துவிட்டோம்” , “மாற்றம் இப்போது தொடங்குகிறது  என குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 330 க்கும் அதிகமான இடங்களை வென்றுவிட்டது. மேலும் 160  க்கும் அதிகமான இடங்களுக்கான முடிவுகள் வரவேண்டியுள்ளன.

கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 99 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

பிரித்தானியாவில்  ஆட்சி அமைக்க 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதற்கமைய , இதுவரை வெளியான முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி – 391 இடங்களையும்,  கன்சர்வேடிவ்  கட்சி 99 இடங்களையும் , லிபரல் டெமாக்ரடிக் கட்சி 60 இடங்களையும் பிடித்துள்ளன.

இதேவேளை, தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் படுதோல்வி அடைந்துள்ளார் . அத்தோடு, தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.