நெருக்கடியில் ஆசியா - ஜப்பானின் அதிரடி முடிவு!

14.03.2026 14:40:04

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், தனது தேசிய மசகு எண்ணெய் கையிருப்பிலிருந்து (Oil Reserves) ஒரு பகுதியைச் சந்தைக்கு விடுவிக்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுமார் 80 மில்லியன் கொள்கலன் மசகு எண்ணெயை இவ்வாறு விடுவிக்க பிரதமர் சனாயே டகாச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இது ஜப்பானின் வரலாற்றில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அளவிலான எண்ணெய் விடுவிப்பாகக் கருதப்படுகிறது.

ஜப்பான் தனது மசகு எண்ணெய் தேவையில் சுமார் 95 சதவீதத்தை மத்திய கிழக்கிலிருந்தே இறக்குமதி செய்கிறது.

தற்போது ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ஜப்பானின் எரிபொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஜப்பானின் மீன்பிடி நகரமான மிசாகியில் (Misaki) உள்ள மீனவர்கள் மற்றும் கடல்சார் உணவு வர்த்தகர்கள் எரிபொருள் விலையேற்றத்தால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.