கிளியாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
07.11.2021 14:39:52
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் கிளியாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 23.3 அடி உயரமுள்ள மதுராந்தகம் ஏரியில் தற்போது 22.9 அடி உயரத்துக்கு நிரம்பி ததும்புகிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.