இலங்கைக்கு மேலும் 120,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்

19.09.2021 04:31:38

இலங்கைக்கு மேலும் 120,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை ஏற்றிவந்த விமானம் இன்று(19) அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், இவை இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.