பதவியை இராஜினாமா செய்தார் அலி சப்ரி
05.04.2022 11:43:55
நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அலி சப்ரி அறிவித்துள்ளார்.
முன்னதாக, பெசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக அமைச்சரவையை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதற்மைய, புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று குறித்த பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது