தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
கொரோனா விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார். நிர்வாகம் சார்பில் உரிய நடடிக்கை எடுக்கப்படும் கரூர்: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாநகராட்சி சார்பில் மேயர் கவிதா தலைமையில். துணை மேயர் ப.சரவணன், ஆணையர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கரூர் ஜவஹர் பஜாரில் சாலைகளில் நடந்து சென்றோர், வாகனங்களில் சென்றவர்களுக்கு இலவசமாக முகக்க வசங்களை வழங்கி விழி ப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் அப்பகுதியில் இருந்த ஹோட்டல்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் மேயர் கவிதா ஆய்வு செய்து அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் தவறும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா, மாநகராட்சி மண்டலத்தலைவர் அன்பரசன், மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.