ஒட்டுமொத்த பணவீக்கம் நவம்பரில் சரிவு
21.12.2022 16:14:16
ஆண்டு அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆகக் குறைந்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
பணவீக்க மாற்றம்
ஒக்டோபரில் பதிவாகியிருந்த 70.6% உடன் ஒப்பிடுகையில் நவம்பரில் மொத்த பணவீக்கம் குறைந்துள்ளதாக திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணவீக்கமானது ஒக்டோபரில் பதிவாகிய 80.9% இல் இருந்து நவம்பரில் 69.8% ஆகக் குறைந்துள்ளது.
உணவு அல்லாத பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் பதிவான 61.3% உடன் ஒப்பிடுகையில் 60.4% ஆக குறைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கையினை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்