தனது திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்
24.01.2022 03:25:46
கொவிட் ஒமிக்ரோன் கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது திருமணத்தை இரத்து செய்துள்ளார்.
நியூசிலாந்தில் ஒமிக்ரோன் சமூகப் பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பங்கேற்கும் அந்த 100 பேருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கடுமையான விதிகளைக் கருத்தில் கொண்டு, தனது திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.