இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பில்கேட்ஸ்!
|
பில்கேட்ஸ் வந்த தனி விமானம் விஜயவாடாவில் தரையிறங்க முடியாமல் நடுவானில் சுற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இன்று அதிகாலை அவரின் தனி விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தது. |
|
மூடுபனி காரணமாக ஓடுபாதை தெரியாததால், பில்கேட்ஸ் வந்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 20 நிமிடங்களுக்கு மேலாக வானில் வட்டமடித்து. பனி விலகிய பின்னரே தரையிறங்க அனுமதி கிடைத்து. இதனையடுத்த, தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே செயல்படுத்தி வரும் சுகாதாரத் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துமாறு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். குடிமக்களுக்கான விரிவான டிஜிட்டல் மருத்துவ வரலாறுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சுகாதார பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டமான சஞ்சீவனி, டேட்டா லேக் மற்றும் வாட்ஸ்அப் கவர்னன்ஸ் திட்டங்கள் குறித்து சந்திரபாபு நாயுடு விளக்கினார். இதனை சிறந்த பனி என பில்கேட்ஸ் பாராட்டினார். மேலும், உண்டவல்லி கிராமத்தில் உள்ள ட்ரோன்கள் மற்றும் AI மூலம் சாகுபடி செய்யப்படும் விவசாயப் பண்ணைக்குச் சென்று விவசாய நடைமுறைகளில் உள்ள தொழில்நுட்பங்களைப் பார்வையிட உள்ளார். அதனை தொடர்ந்து, டெல்லியில் இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ள இந்தியா ஏஐ உச்சிமாநாட்டில் பில்கேட்ஸ் கலந்து கொள்ள உள்ளார். இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டை துவங்கி வைக்கிறார். இதில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும், கூகுள் சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சி இஓ சாம் அல்ட்மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். |