ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் தளபதி மாஸ் வசூல்!

15.12.2024 08:07:00

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி நடித்து இளையராஜா இசையமைப்பில் உருவான திரைப்படம் தளபதி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. சமீபகாலமாக மெகாஹிட்டான திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வது என்பது வழக்கமாகிவிட்டது.

இந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி வசூலில் பட்டையைக் கிளப்பியது. அந்த வகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று அவருடைய கல்டு க்ளாஸிக் திரைப்படம் என அனைவராலும் கொண்டாடப்படும், தளபதி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

தற்போது, ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தளபதி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது