
சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ?
04.07.2021 10:02:00
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா.இவரது நடிப்பில் தற்போது சூர்யா 40, என்கிற படம் உருவாகி வருகிறது.
மேலும் பெயரிடப்படாத, இயக்குனர் ஞானவேல் இயக்கி வரும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இதுதவிர, கௌதம் மேனன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா அந்தாலஜி படத்திலும் நடிக்கிறார்.
மேலும் மாபெரும் எதிர்பார்ப்பில் விரைவில் துவங்கியிருக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிகர் சூர்யா கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 கோடி என்று தெரிவிக்கின்றனர்.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரத்தில் பெரிதும் கூடப்படுவது இவை தான்.