எடப்பாடியை விட்டுட்டு திமுக மீது தவெக பாயுதே ஏன்?
|
தவெகவுக்கு 2 தொகுதிகளிலுமே ஆதரவு நிலைப்பாடு இல்லை.. மதுராந்தகத்துல ஒரு கூண்டுக்குள்ள 5000 பேரை அடைச்சு வச்சிட்டுப் பேசுனா மட்டும் போதுமா? மதுராந்தகத்தை சுற்றிலும் நிறைய கிராமங்கள் உள்ளன.. அந்த கிராமங்கள்தோறும் போய் முதலமைச்சர் நேரில் பயணித்து இருக்க வேண்டும்" என்று பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார். Gentleman சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய்யாக இருக்கட்டும், அவருக்கு முன்னாடி பேசின ஆதவ் அர்ஜுனாவா இருக்கட்டும், மரகதம் குமரவேலா இருக்கட்டும், வரவேற்பு நிகழ்த்திய ராஜ்மோகனா இருக்கட்டும்... இப்படி இவர்கள் எல்லாரும் பேசும்போது, நாம் ஏன் தமிழ்நாட்டுல பிறந்தோம் என்று தோன்றியது.. எதுக்கு இந்த மாதிரியான லாங்குவேஜ் எல்லாம் யூஸ் பண்றாங்கன்னு புரியவில்லை. |
|
அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, "நான் தலைவர் கூடவே சேர்ந்து வாழணும்" என்கிறார்.. ஆதவ் அர்ஜுனா பேசும்போது, எடப்பாடி தொகுதியில் நாங்க நிறுத்துன வேட்பாளர் அவரோட போய் சேர்ந்து விட்டதாக சொல்லி, போட்டோவைக் காட்டுறாரு. விஜய் பேசுனது எல்லாமே முரண்களாகவே இருந்தது.. பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசும்போது, தாயை பழித்ததை கடந்துட்டேன், ஆனால் தமிழ்நாட்டு பெண்கள் மேல கை வச்சா சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்.. இதெல்லாம் வெறும் டயலாக்காத்தான் இருக்கிறதே தவிர, முறையானதாக இல்லை. கிரானைட் வீரமணி விவகாரம் கிரானைட் வீரமணி விவகாரத்தில் 2 ஆட்சியாளர்களுமே அவரைத் தப்பிக்க விட்டுட்டீங்க. நீதிபதி சரியா இருந்ததுனாலதான் மீண்டும் அந்த வழக்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு. ரைமிங்கா பேசுவதாக சொல்லிட்டு, அங்கிள்னு பேசுவதெல்லாம் நகைப்புக்குரியதாக உள்ளது. ஒரு பெண் மீது அவதூறு பேசப்படுகிறதென்றால், தாய், மனைவி என்றெல்லாம் பாரபட்சம் பார்க்கக்கூடாது. காரணம் உங்களிடம் அதிகாரம் உள்ளது.. சட்டம் உள்ளது.. காவல்துறை உள்ளது.. அப்படியிருக்கும்போது "நான் கடந்து போயிட்டேன், பொறுத்துக்கிட்டேன்" என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. யாரா இருந்தாலும் தாயும் பெண்தானே, மனைவியும் பெண்தானே? ரியாலிட்டி & சினிமாத்தனம் கடந்த காலத்துல இதே மாதிரி மனைவி குறித்து பேசும்போது நீங்க கடந்துதானே போனீங்க? இதெல்லாம் யாரும் மறக்கல. இப்போது இந்த பிரச்சாரம் ஓட்டாக மாறுமா என்று தெரியவில்லை.. அது செயற்கையான சிம்பத்தியை கிரியேட் செய்வதற்காகவே பேசியதுபோலத்தான் உள்ளது.. சென்சிடிவ்வா, ரியாலிட்டியா இல்லாம சினிமாத்தனமா, பெண்களோட ஓட்டை கவரவேண்டும் என்ற நோக்கம் மட்டுமே முதலமைச்சர் பேச்சில் உள்ளது. அதேபோல ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு முழுக்க முழுக்க திமுக மீதான வெறுப்பை உமிழும் நிலையில்தான் இருக்கிறது.. நீங்க சாட வேண்டியது அதிமுகவைத்தானே தவிர, திமுகவை இல்லை.. ஏனென்றால் 2 தொகுதியிலயும் அதிமுகதான் முதலிடம் பெற்றுள்ளது. அவர்களை விட்டுட்டு திமுகவை மறுபடியும் பேசுறதைப் பார்த்தா, 2வது இடத்தை தக்க வைக்கிறதுக்காகவே தவெக போட்டி போடுகிறதா என்ற சந்தேகம் வருகிறது. ஆதவ் அர்ஜுனா பெட்டி தூக்கி கொண்டிருந்தார் ஆதவ் அர்ஜுனா என்று எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாகவே விமர்சிக்கிறார். லெப்ட் ஹேண்டில் ஆதவ் அர்ஜுனாவை டீல் செய்கிறார்.. இதற்கு பதில் என்ன? தவெகவை முளைச்சு மூணு இலை விடல, என் வயது, என் சர்வீஸ் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் பெரிய அளவில் எடுபடுகிறது.. ஆனால் தவெகவின் பிரச்சாரம் ஏன் இப்படி உள்ளது? அறிவுப்பூர்வமாக பேசியிருக்க வேண்டும்.. இந்த 4 மாதம் செய்த சாதனைகளை சொல்லியும், இனி மக்களுக்கு செய்ய போவதை பற்றியும் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு அரசியல் சாடல் செய்வது எப்படி சரியாகும்? மரகதம் குமரவேல் பேசும்போது கட்சி மாறியதுக்கான சரியான விளக்கத்தைச் சொல்லவில்லை.. ராஜ்மோகன் பேசும்போது "என் தலைவர் கூட சேர்ந்து வாழணும்னு வந்துட்டாங்க"ன்னு பேசுறது பேச்சா இது? இனிமேலாவது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு, வெறுப்பை உமிழும் வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு அறிவுப்பூர்வமாக பேசுங்க. திணிக்கப்பட்ட தேர்தலா இது மக்களை நீங்க எப்போதுமே முட்டாள் என்று நினைத்து பேசலாமா? இந்தத் தேர்தல் திணிக்கப்படுற தேர்தல் என்று சீமான் சொல்கிறார்.. அப்படியானால் இந்த தேர்தல் எதுக்காக வருகிறது? இதுக்கு திமுகவும் அதிமுகவும்தான் காரணம் என்று விரிவாக விளக்கி மக்களை சமாதானப்படுத்த வேண்டாமா? இங்கே எந்தப் பேரமும் நடக்கவில்லை என்று பேசியிருக்க வேண்டும். வாக்குக்கு தவெக பணம் கொடுக்கும் காட்சிகள் வைரல் ஆகிறதை பத்தி ஏன் பேசவில்லை? குற்றம் சாட்டப்பட்ட கிரானைட் வீரமணியோட 2 அமைச்சர்கள் மேடையில் கலந்துகிட்டு இருக்காங்க. இவ்வளவு ஓட்டைகளை வச்சிட்டு, இதெல்லாம் மக்களுக்கு தெரியாதுன்னு நினைச்சு நீட்டி முழங்குனா எப்படி? 2 தொகுதிகளிலுமே தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு இல்லை.. மதுராந்தகத்துல ஒரு கூண்டுக்குள்ள 5000 பேரை அடைச்சு வச்சிட்டுப் பேசுனா மட்டும் போதுமா? மதுராந்தகத்தை சுற்றிலும் நிறைய கிராமங்கள் உள்ளன.. அந்த கிராமங்கள்தோறும் போய் முதலமைச்சர் பயணிக்கணும்... சப்ப பீஸ், அங்கிள் - வேற எதுவும் தெரியாதா மாற்று அரசியலில் நாகரிகமா, கண்ணியமா இருக்க வேண்டும். அதைவிட்டுட்டு "சப்ப பீஸ்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசலாமா? "அங்கிள்" என்று அசிங்கமா பேசுறதை தாண்டி உங்களுக்கு வேற எதுவும் தெரியலையா? ஆட்சியும் அதிகாரமும் கொடுத்தாச்சு, 4 மாசத்துல என்ன செய்யப் போறீங்கன்னு தொகுதி மக்களுக்கு தெளிவாக சொல்லுங்க. கடந்த கால அதிமுக ஆட்சியா இருந்தாலும் சரி, திமுக ஆட்சியா இருந்தாலும் சரி, இதே மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்கு என்ன செய்தார்? எனவே தவெக தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் பலவீனமானவராக இருக்கிறார்.. எனவே அந்த மக்கள் எப்படி வாக்களிப்பாங்கன்ற கேள்வி உள்ளது" என்றெல்லாம் பேசியிருக்கிறார். |