இந்தியாவிடமிருந்து 20 தொடருந்து பெட்டிகள்!

20.09.2021 05:36:53

 

இலங்கையில் தொடருந்து சேவை உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடிப்படையில், 20 தொடருந்து பெட்டிகள் அடங்கிய மற்றுமொரு தொகுதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி குறித்த தொடருந்து பெட்டிகள் அடங்கிய தொகுதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 160 தொடருந்து பெட்டிகளில் மற்றுமொரு தொகுதியாகவே இது கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் 82.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.