தைப்பொங்கலுக்கு உதவி

12.01.2025 12:08:02

யாழ் விழிப்புலனற்றோர் சங்கம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, 320 விழிப்புலனற்ற குடும்பங்களுக்கு 500,000 ரூபாய் பெறுமதியில் பொங்கலுக்கான அரிசி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வழங்கப்பட்டது.

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர்   யோ.சுதாகரன் தலைமையில்  சங்கத்தின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் இடம் பெற்ற இவ் உதவித் திட்டத்தை,  ஆச்சிரம முதல்வர் அமுத கலாசுரபி கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன்  சனிக்கிழமை (11)  காலை 10.30 மணிக்கு சென்று வழங்கி வைத்தார்.