மீண்டும் 6000 ஊழியர்களை பணி நீக்கம்

28.03.2024 07:49:42

உலகின் முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டெல் நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு 6650 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

கொரோனா வைரஸ் காலகட்டத்தில் கூகுள், மைக்ரோசாப்ட் உட்பட பல பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என்பதும் சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி விட்டதை அடுத்து ஒரு சில நிறுவனங்கள் அதிகமான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை பெரிய நிறுவனங்கள் எடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கூட பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது டெல் நிறுவனம் உலகம் முழுவதும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வருவதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது