இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!.
2026 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்தியபாமா. அதேபோல் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மரகதம் குமரவேல் களமிறங்கி வெற்றி பெற்றார். ஆனால் தவெக ஆட்சி அமைத்துவிட்டதால் இரண்டு பேரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக அந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது..
முடிவில் அவர்கள் இருவரும் அந்த தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தவெக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது, இந்நிலையில்தான், தான் பெற்ற வெற்றி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ‘தாராபுரத்தில் எனது வெற்றிக்கு காரணம் முதல்வர் விஜய் மட்டுமே.. இது ஒரு சரித்திர வெற்றி.. மக்கள் இவ்வளவு உற்சாகமாக வெற்றியை கொண்டாடி நான் பார்த்ததில்லை.. இப்போது மக்கள் ஆவாரம் செய்தார்கள் என்றால் இந்த ஆட்சியின் மூலம் விடிவு வரப்போகிறது என்பதை அவர்கள் முழுமையாக உணர்ந்துள்ளார்கள்’ என அவர் கூறினார்..
அதேபோல், தனது வெற்றி பற்றி கருத்து தெரிவித்த மரகதம் குமரவேல் ‘நாங்கள் ராஜினாமா செய்த நான்கு மாதங்களில் எங்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை கிளப்பினார்கள்.. ஆனால், மதுராந்தகம் தொகுதி மக்கள் என் மீதும் தளபதி விஜய் மீதும் நம்பிக்கை வைத்து என்னை மீண்டும் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார்.