‘பில்லா 2’ படத்தை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் - ஏன் தெரியுமா ?

13.07.2021 11:11:40

சக்ரி டொலேட்டி இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பில்லா 2’ படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ‘பில்லா’வும் ஒன்று. கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, பில்லா 2-ம் பாகமும் எடுக்கப்பட்டது. ஆனால் இது முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் அஜித்தின் மாஸான பஞ்ச் வசனங்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மிப்பூட்டும் பின்னணி இசை ஆகியவை மிகவும் பிரபலமானதால் இப்படத்தை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். சக்ரி டொலேட்டி இயக்கி இருந்த இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.