வயலில் இறங்கி விவசாயிகளிடம் குறைகேட்ட மு.க.ஸ்டாலின்
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் உசிலம்பட்டி, பாப்பாபட்டிக்கு புறப்பட்டுச் சென்றார்.
அப்போது வழியில் கே.நாட்டாபட்டியில் பெண்கள் வயலில் வேலை பார்ப்பதை அவர் பார்த்தார். உடனடியாக அங்கு காரை நிறுத்தி இறங்கிய மு.க.ஸ்டாலின் வயல் வரப்புகளில் நடந்து சென்று பெண் தொழிலாளர்களை சந்தித்தார்.
அவரை கண்டதும் பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். எளிமையாக வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களிடம் பேசியதைக் கண்டதும் அவர்கள் திக்குமுக்காடி நின்றனர்.
பின்னர் தங்கள் தேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர். அதனை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் அங்கிருந்து பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.