நம்பிக்கையில்லா பிரேரணை பதுங்கிய22 எம்.பி.க்கள்.
11.04.2026 17:51:54
|
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 22 எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை |
|
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் நிற்பதனால் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை . அதேபோல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன், மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,ஜீவன் தொண்டமான் மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. |