முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜோதிகா!
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.
இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படத்தை சூப்பர் 30 படத்தை இயக்கிய விகாஸ் பால் இயக்கினார். இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
இதையடுத்து பாலிவுட்டில் அடுத்து உருவாகும் ’ஸ்ரீகாந்த்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். இது பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்தின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.