இந்தோனேசிய சிறையில் உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர் உடலுக்குஅஞ்சலி

24.05.2022 09:30:25

தூத்தூரை சேர்ந்த மீனவர் மரியஜெசின்தாஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்த விஜய்வசந்த் எம்.பி.ஆறுதல் தெரிவித்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த ஜெனோபாவின் மகன் மரிய ஜெசின்தாஸ் (வயது 33). 

 

இவர் உள்பட 4 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி இந்தோனேசியா கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக கடலோர காவல் படையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்தை அடுத்து மரிய ஜெசின் தாஸ் இந்தோனேசிய சிறையில் உயிரிழந்தார்.

அவரது உடல்  இந்தோனேசியா வில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊரான தூத்தூருக்கு எடுத்து செல்லப்பட்டது 

 

இந்நிலையில் உயிரிழந்த மீனவர் ஜெசின்தாஸ் உடலுக்கு, குமரி தொகுதி எம்.பி.  விஜய்வசந்த்  நேரில் அஞ்சலி செலுத்தினார். 

 

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரமுகர்களும்  அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜெசின்தாஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்த  விஜய்வசந்த் எம்.பி. ஆறுதல் தெரிவித்தார்