
வான்வெளியில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானங்கள்.
வெள்ளிக்கிழமை (செப் 19) மூன்று ரஷ்ய போர் விமானங்கள் எஸ்டோனியாவின் வான்வெளியை மீறி நுழைந்தன. இதனைக் கண்டித்து NATO அமைப்பு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. Vaindloo தீவின் அருகே, பின்லாந்து வளைகுடாவில் 12 நிமிடங்கள் வரை ரஷ்ய விமானங்கள் இருந்தன. இந்நிலையில், நேட்டோவின் பால்டிக் வான்வெளி காவல் பணியில் ஈடுபட்ட இத்தாலிய F-35 விமானங்கள் அவற்றை துரத்தி வெளியேற்றின. |
"இது ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. நேட்டோ எப்போது பதிலளிக்க தயாராக உள்ளது" என NATO செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எஸ்டோனியாவின் வெளிவிவகார அமைச்சகம், ரஷ்ய விமானங்கள் எந்தவொரு பறப்பு திட்டமின்றி, transponders switch-off செய்யப்பட்ட நிலையில், விமான போக்குவரத்து சேவையுடன் தொடர்பு கொள்ளாமல் நுழைந்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்டோனியா, மாஸ்கோவின் தூதுவரை அழைத்து கண்டன கடிதம் வழங்கியது. எஸ்டோனியா வெளிவிவகார அமைச்சர் மார்கஸ் சாக்னா, "இந்த ஆண்டு இடித்து நான்காவது முறையாக எஸ்டோனியாவின் வான்வெளி மீறப்படுகிறது. ஆனால் இந்த முறை மிகமோசமானது" என்றும், "ரஷ்யாவின் எல்லை மீறும் முயற்சிகள் மற்றும் ஆக்கிரமிப்பு போக்குகள், அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை அதிகரிக்கவேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றன' என கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கை தலைவர் காயா காலஸ், "இது மிகவும் ஆபத்தான செயல், இது பிராந்தியதிதில் பதற்றத்தை அதிகரிக்கிறது" என கண்டனம் தெரிவித்தார். நேட்டோ ஒப்பந்தத்தின் Acticle 4-ன் கீழ், இந்த சம்பவம் குறித்து எஸ்டோனியா ஆலோசனை கூட்டம் நடத்தும் வாய்ப்பும் பரிசீலிக்கப்படுகிறது. |