மொத்தமாக உலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து எட்டு கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர்!

12.02.2021 09:40:15

 

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மொத்தமாக எட்டு கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் எட்டு கோடியே மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 23இலட்சத்து 78ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர பத்து கோடியே 83இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மொத்தமாக கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.