’6 ஆசனங்களையும் முன்னணி கைப்பற்ற வேண்டும்’
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் எமது அணி கைப்பற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இம்முறை எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணிக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். யாழ்ப்பாணம் (யாழ். - கிளிநொச்சி) தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எமது மக்கள் வழங்க வேண்டுமென அன்பாக வேண்டுகின்றேன்.
அத்துடன் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விருப்பு இலக்கம் 02. கஜேந்திரனாகிய எனது விருப்பு இலக்கம் 09. மூன்றாவது விருப்பு வாக்கை எமது அணியில் நீங்கள் விரும்பும் ஒருவருக்கு வழங்கலாம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் எமது அணி கைப்பற்ற வேண்டும். தங்களது குடும்பத்தவர்கள், ஏனைய உறவினர்கள். நண்பர்களிடமும் எமக்காக வாக்களிக்குமாறு கோருமாறு அன்பாக வேண்டுகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.