பயனர்களை வியக்க வைத்த மேஜிக் வீடியோ

11.08.2023 09:51:22

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு மேஜிக் வீடியோ பயனர்களை வியக்க வைப்பதாக உள்ளது. பொதுவாகவே மேஜிக் என்றாலே அனைவருக்கும் கண்கட்டி வித்தை போலத்தான் இருக்கும். சமூக வலைதளங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் பயனர்களை ரசிக்க வைக்கிறது. சில வீடியோக்கள் இது எப்படி? என்ற கேள்வியை எழுப்பும். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு மேஜிக் வீடியோ பயனர்களை வியக்க வைப்பதாக உள்ளது. பொதுவாகவே மேஜிக் என்றாலே அனைவருக்கும் கண்கட்டி வித்தை போலத்தான் இருக்கும். அதன் உண்மை தன்மையை பார்வையாளர்களால் எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. அதேபோலத் தான் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், பொதுமக்கள் கூட்டத்திற்கு மத்தியில் மேஜிக் நிகழ்த்தப்படுகிறது. அப்பகுதியில் 2 கண்ணாடி பெட்டிகள் அந்தரத்தில் இருக்கிறது. அதில் ஒரு கண்ணாடி அறையில் செல்ல முடியாமல் 4 பேர் சென்றுள்ளனர். அதன்அருகே மற்றொரு வெற்று கண்ணாடி அறை உள்ளது. பிறகு துணியை வைத்து 2 பெட்டியையும் மறைத்த சில நொடிகளில் ஒரு கண்ணாடி பெட்டியில் இருந்தவர்கள், மற்றொரு கண்ணாடி பெட்டிக்குள் தாவி உள்ளனர். இதைப்பார்த்த பயனர்கள் எப்படி இது முடிந்ததது என்று திகைத்து போய் உள்ளனர். தன்சு ஏகன் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.