ரஜினியின் 170வது படம்
02.03.2023 16:56:38
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 169 ஆவது படமாகும். இதனை தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல், ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது