ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக நாடுகள் திட்டம்!!

18.08.2021 07:35:56

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க 24ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டம் கூட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தாலிபான்கள் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கின.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் அந்நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆப்கனில் பல்வேறு மனித உரிமை மீறல்களும் தாலிபான்களால் அரங்கேற்றப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்துள்ளது.இந்த சிறப்புக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.