நீ வந்த பிறகு காதல் பற்றிய பார்வை மாறிவிட்டது!
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் ஜெயம் ரவி. சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவி மோகன் எனவும் மாற்றிக் கொண்டார். ரவி மோகன் ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஆர்த்தி தன்னை மோசமாக நடத்துவதாக புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ரவி மோகன்..
ஒருகட்டத்தில் விவாகரத்து வழக்கும் தொடங்கப்பட்டது. தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஒருபக்கம் ரவி மோகன் பாடகி கென்னிஷா என்பவரோடு நெருக்கமாக இருக்கிறார்.. எந்த விழாவுக்கு ரவி மோகன் போனாலும் அவருடன் கென்னிஷா செல்கிறார்
. கடந்த ஏழாம் தேதி கெனிஷா தனது பிறந்தநாளை கொண்டாடினார்.. அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து ரவி மோகன் வாழ்த்து சொன்னார்.
இந்நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள கென்னிஷா ‘சிறு வயதிலிருந்தே என்னை யாரும் பொருட்டாக மதித்ததில்லை.. எல்லோராலும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவே நான் உணர்ந்தேன்.. நான் எதிர்பார்த்தது ஒரு சின்ன அன்பு மட்டும்தான்.. ஆனால் ரவி மோகன்.. நீ வந்த பிறகு என் உலகமே மாறிவிட்டது.. என்னுடைய எண்ணங்கள், செயல்கள், காதல் பற்றிய என்னுடைய பார்வை எல்லாமே புதிதாக இருக்கிறது..
மற்றவர்கள் இதை எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம்.. ஆனால் நம்மைப் பற்றி புரிந்தவர்களுக்கு நாம் எவ்வளவு உண்மையாக, நிம்மதியாக இருக்கிறோம் என்பது தெரியும்.. என்னுடைய கடினமான நேரங்களில் எனக்கு உறுதுணையாக நின்று என்னுடைய சின்ன வெற்றியை கூட நீ உன்னுடைய வெற்றியாக கொண்டாடினாய்.. அதற்கு உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது’ என உருகியிருக்கிறார் கென்னிஷா.