வணங்கான் வெற்றி

14.01.2025 07:04:00

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. படத்தை பார்த்த பலர் சூர்யா இந்த படத்தை மிஸ் பண்ணி விட்டார் என்றும், அவர் மட்டும் நடித்திருந்தால், இந்த படத்திற்கு நல்ல ஒபனிங் கிடைத்து இருக்கும் என்று கூறப்பட்டு நிலையில், பாலா இந்த படத்திற்காக பல விஷயத்தை மாற்றிக் கொண்டது தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்படத்தில், அருண்விஜய்,காது கேளாத, வாய் பேச முடியாதவராக நடித்து இருக்கிறார். இவர் பெண்கள் விடுதியில் வாட்ச் மேனாக வேலைக்கு செல்கிறார்.

அங்கு கண் தெரியாத, மாற்றுத்திறனாளிகளை அன்புடனுடன் கனிவுடனும் கவனித்துக்கொள்கிறார். அப்போது தான், கண் தெரியாத பெண்கள் குளிப்பதை வீடியோவில் பார்த்து ரசிக்கும் மூன்று பேரை கொலை செய்கிறார். இதையடுத்து, போலீசாரால் கைது செய்யப்படும் அருண்விஜய், கொலையை நான் தான் செய்தேன் என்று ஒத்துக்கொண்டாலும், கொலை செய்ததற்கான காரணத்தை சொல்ல மறுக்கிறார்.

இயக்குநர் பாலா: இந்த கொலையை கண்டுபிடிப்பதற்கான சமுத்திரக்கனி போலீஸ் உயர் அதிகாரியாக வருகிறார். ஆனால், அவரும் இந்த கொலைக்கான காரணமே தெரியாமல் திணருகிறார். இறுதியில், காவல்துறைக்கு கொலைக்கான காரணம் தெரிந்ததா... அருண் விஜய்க்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதுதான் வணங்கான் படத்தின் கதை. இத்திரைப்படம் அக்மார்க் பாலா படம் என்று சொல்லும் அளவிற்கு, அருண் விஜய், உடை, பாவனை அனைத்தும் பக்காவாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் ரோலில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அருண்விஜய். வணங்கான் படத்தில் கோட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

மோசனவரா : வணங்கான் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், இந்த படத்திற்காக பாலா மொத்தமாக மாறி இருக்கிறார் என்பது அவர் அளித்த பல பேட்டியின் மூலம் நன்றாக தெரிகிறது. பாலா தன்னுடைய படத்தில் நடிக்கும் ஹீரோக்களை அடித்து கொடுமைப்படுத்துவார் என்றொல்லாம் செய்திகள் பரவின, ஆனால், அவரின் பேட்டியை பார்த்த பலர், பாலா மோசமானவர் என்று நெனச்சேன், இவர் இவ்வளவு நல்லவரா இருக்காரே என சொல்லும் அளவுக்கு அவருடைய பேச்சை இருந்தது. இதுவே, வணங்கான் படத்தை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று பார்க்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இயக்குநர்கள் மக்களுக்கு கொஞ்சமாவது நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்ற சூசகத்தை இயக்குனர் பாலா தற்போது நன்கு புரிந்து இருக்கிறார்.