அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்!

01.08.2024 17:00:00

ஜேர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருகிறது. அதனால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 82,000ஆக இருந்தது. அதுவே, ஜூலை மாதத்தில் 2.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பெடரல் வேலைவாய்ப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் பலவீனமான பொருளாதார வளர்ச்சியும் கோடை விடுமுறையும் இந்த வேலையின்மை அதிகரிப்புக்கு பகுதியளவுக்கு காரணமாகும்.

வேலையின்மையால் ஜேர்மனியின் நிதி நிலைமை பாதிப்பு வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் குறுகிய கால வேலைப் பலன்களுக்கான அரசு செய்யும் செலவு எதிர்பார்த்ததை விட அதிகமாகியுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும், 903,000 பேர் வேலையின்மைக்காக அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட 105,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, வேலையின்மை அரசின் பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.