2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தாம் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

20.01.2021 11:26:15

 

இலங்கை அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அசந்த டி மெல் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தாம் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணி தொடர்ச்சியாக மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றமை காரணமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக இலங்கை அணியின் முகாமையாளராகவும், தலைமை தெரிவாளராகவும் உள்ள அசந்த டி மெல் கடும் மனஅழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியின் முகாமையாளராகவும், தலைமை தெரிவாளராகவும் அசந்த டி மெல் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.