ஏழு வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்கும் கன்னட திரைப்படம் !

28.07.2021 10:25:46

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான த்ரிஷா, அவ்வவ்போது பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்தவகையில் அவர் தற்போது ஏழு வருடங்களுக்கு பின் கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் யுடர்ன் திரைப்படத்தை இயக்கிய பவன் குமார் இயக்கும் கன்னட திரைப்படம் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.