புற்றுநோயாளிக்கு லாட்டரியில் அடித்த ஜாக்பாட் பரிசு

02.05.2024 09:02:28

லாவோஸ் நாட்டை சேர்ந்தவர் செங்சைபன். 46 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அமெரிக்காவில் குடியேறி உள்ள செங்சைபன் கடந்த சில நாட்களுக்கு ஓரிகானின் போர்ட்லேண்ட் பகுதியில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார்.

அதில் அவருக்கு 1.3 பில்லியன் டாலர்கள் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்புடைய இந்த பரிசு தொகையை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த பணத்தை புற்றுநோய் சிகிச்சை பெற பயன்படுத்த இருப்பதாக செங்சைபன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இப்போது நான் என் குடும்பத்தை ஆசீர்வதித்து எனக்காக ஒரு நல்ல மருத்துவரை பணியமர்த்த முடியும். என் வாழ்க்கை மாறிவிட்டது. எனது கனவு வீட்டை வாங்குவதற்கும் நான் இந்த பணத்தை பயன்படுத்துவேன் என்றார்.