அரியநேத்திரனுக்கு பாதுகாப்பு!
19.09.2024 08:07:45
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. |
அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் (MSD) இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்றுமுன்தினம் முதல் பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர். அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் (MSD) ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இரண்டு பேரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |