நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்

12.08.2023 10:56:16

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சத்யராஜ். திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாகவும், மேலும் பல குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சோகம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். இவர் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் அவர் காலமானார். அவரது வயது 94. கோவையில் வசித்து வந்த நாதாம்பாள் அங்கு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு சத்யராஜ் தவிர கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தாயார் உயிரிழந்த செய்தி கேள்விப்பட்டு ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவைக்கு விரைந்துள்ளார். அவரின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான கோவையில் நடைபெறும் என கூறப்படுகிறது. சத்யராஜின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.