எம்மை அசைக்க முடியாது
18.12.2024 08:22:36
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு இடம்பெறும் நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்த குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.