கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25.07.2021 11:41:26

 

கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து சனிக்கிழமை மத்திய ஏதென்ஸில் கூடியிருந்த மக்களை கலைக்க கிரேக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில எதிர்ப்பாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் இதற்கு பதிலளிக்கும் வகையில் கண்ணீர்ப்புகை வீசியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கிரேக்கத்தில் 12,890 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 45% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகள் அதிகரித்துள்ளதால் சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கிரேக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.