இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 23 இந்திய மீனவர்கள் கைது

14.10.2021 08:17:50

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.