பீம்லா நாயக்கில் இணைந்த சம்யுக்தா மேனன்

30.10.2021 04:21:50

சாகர் சந்திரா இயக்கத்தில் பவன் கல்யாண் - ராணா நடித்து வரும் படம் பீம்லா நாயக். இப்படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக மலையாள நடிகை நித்யாமேனன் நடித்து வரும் நிலையில் ராணாவிற்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசப்பட்டது. ஆனால் தனக்கான காட்சிகள் குறைவாக இருப்பதாக சொல்லி அவர் அந்த படத்தை தவிர்த்து விட்டார்.

இதையடுத்து சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தைநடைபெற்றுவந்த நிலையில் தற்போது ராணாவுக்கு ஜோடியாக மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தவகையில் பீம்லா நாயக் படத்தில் இரண்டு மலையாள நடிகைகள் நாயகிகளாக நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.