உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சிட்டா நல்லா இருக்கும் - விஜய் ஆண்டனி

12.01.2022 05:32:31

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகி இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சினிமா வட்டாரம் சார்ந்த நடிகர், நடிகைகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி சமூகவலைதளத்தில் ‛‛‛‛கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்'' வாழ்க வளமுடன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலானது.